Posts

Showing posts from July, 2018

How Tamil Months were named - Kanchi Mahaperiyavaa

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன? காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும். 1. சித்திரை மாஸம் சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது 2. வைகாசி மாஸம் விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று. 3. ஆனி மாஸம் அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று. 4. ஆடி மாஸம் ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அ...